GYPSY MOVIE SONG LYRICS
மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடல் வரிகள்
Movie-Gypsy/Song-Manamengum Maaya Oonjal/Casts-Jeeva,Natasha Singh/
Singers-Haricharan,Ananthu,Dhee/Music-Santhosh Narayanan/Lyrics-Yugabarathi/
Year-2019
பெண் : மனமெங்கும் மாய ஊஞ்சல்
ஆண் : மனமெங்கும் மாய ஊஞ்சல்
பெண் : உனதன்பில் ஆட ஆட
ஆண் : உனதன்பில் ஆட ஆட
பெண் : மழை பொங்கும் தூய மேகம்
ஆண் : மழை பொங்கும் தூய மேகம்
பெண் : உயிர் உள்ளே சாரல் போட
ஆண் : உயிர் உள்ளே சாரல் போட
பெண் : கோடையும் வாடையும்
பாத்திடா தாவரம்
வரம் நீ தந்தாய்
குழு : வான் பூக்குதே
ஆண் : நான் உன் தோளில் கண் சாய
வெண்மீன்கள் பொன் தூவ
ஆஅ…ஆஅ….ஆ….ஆ…
ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி
ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட
ஆண் : முத்தம் வைக்கும்
வேனீர் காலங்கள்
கட்டி கொள்ளும் ஈர கோலங்கள்
பெண் : உன் கால் தடம் நானே
என் தாய் நிலம் கண்டேனே
தடாகம் தேகம் வாழும்
காணும் மீன்கள் நீ
நான் மண் சேர்ந்து நீர் போல
உன் சாயல் கொண்டேனே
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஆ…
ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி
ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட
ஆண் : ………………………….
ஆண் : மரம் ஒரு இசை
மொட்டரும்பு ஒரு இசை
கடல் ஒரு இசை
நம் உடல் ஒரு இசை
நிலவொளி வீசும்
காற்றில் பேசும்
பறவையின் தாய்மை யாழிசை
பெண் : வெண் சிறகை வீசும்
மூச்சு காற்றிலே
கண் உருக பாடும்
கோடி மூங்கிலே
ஆண் : உன் மொழிகளோடு
தேன் வழிகிறதே
பெண் : என் மார்பிலே
நீ பேசும் வாசம்
ஆண் : நீ அல்லவா….ஆஅ…ஆஅ…ஆ….
இருவர் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
ஆண் : வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
பெண் : அதற்கீடேது சாமி
ஆண் : ஆஅ…..ஆஅ….ஆ…ஆ…ஆ….ஆஆ….
ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட...
கருத்துகள்
கருத்துரையிடுக